பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் மின்னணு நிர்வாகத்தை வலுப்படுத்த மின்னணு பஞ்சாயத்து இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
11 AUG 2026 2:51PM by PIB Chennai
நாட்டில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் மின்னணு நிர்வாகத்தை வலுப்படுத்த பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் மின்னணு பஞ்சாயத்து இயக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பஞ்சாயத்து நடவடிக்கைகளின் மின்னணு திட்டமிடல், வரவு செலவு திட்டமிடல், கணக்குப் பதிவு, தணிக்கை, சொத்து மேலாண்மை, கண்காணிப்பு ஆகியவற்றை எளிதாக்க மின்னணு கிராம ஸ்வராஜ் மற்றும் இணைய வழியில் தணிக்கை உருவாக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்கள் பங்கேற்பு திட்டமிடல் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்பட்டு மின்னணு கிராம ஸ்வராஜ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.
அத்துடன், இணையவழி மூலம் பணம் செலுத்துதல், நிதி மேலாண்மைக்கான பொது நிதி மேலாண்மை அமைப்பு, கொள்முதலுக்கான அரசு மின்னணு சந்தை, பன்மொழி, செயற்கை நுண்ணறிவுமிக்க சேவைகளுக்கான பாஷினி, பாரத் நெட் இணைப்பு கண்காணிப்புக்கான பிஎஸ்என்எல் மற்றும் வானிலை தொடர்பான தகவல்களுக்கான இந்திய வானிலை ஆய்வுத்துறை உள்ளிட்ட பலதரப்பட்ட அரசு மின்னணு தளங்களுடன் இ-கிராம ஸ்வராஜ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2026 ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297553®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2297847)
आगंतुक पटल : 14