பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராம சபைக் கூட்டங்களில் குறைந்த அளவிலான பங்கேற்பு குறித்த ஆய்வு

प्रविष्टि तिथि: 11 AUG 2026 2:56PM by PIB Chennai

கிராம சபை கூட்டங்களில் நிலவும் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பு குறித்த தேசிய அளவிலான ஆய்வு அறிக்கையை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2026 ஜூன் 30 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கை தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்  அமைப்பால் தயாரிக்கப்பட்டது.

கிராம பஞ்சாயத்துகளில் பங்கேற்பு குறைவாகவும் தொடர்ச்சியற்றதாகவும் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வாழ்வாதாரம், தொழில்சார்ந்த தடைகள், போதிய விழிப்புணர்வின்மை, தகவல் தொடர்பு சூழல் இல்லாமை, குறைகளுக்கு உரிய தீர்வு காணாதது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருகையின்மை, நிர்வாகச் செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மையில்லாதது, கூட்டங்களில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் மீது உரிய தொடர் நடவடிக்கைகள் இல்லாதது ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. மகளிர் பங்கேற்பை பொறுத்தவரை இல்லம் சார்ந்த பொறுப்புகள், சமூக தயக்கம், விவாதங்களின்போது ஆணாதிக்கம், பயனுள்ள பங்கேற்பிற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது ஆகிய தடைகள் தொடர்ந்து நீடிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இத்தகவலை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2026 ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297557&reg=3&lang=1

****

TV/IR/PS/SH


(रिलीज़ आईडी: 2297844) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati