சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார ஆராய்ச்சித்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் அடுத்த தலைமுறை ஆய்வாளர்களுக்கான நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2026 1:55PM by PIB Chennai

சுகாதார ஆராய்ச்சித்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் அடுத்த தலைமுறை ஆய்வாளர்களுக்கான அறிவியல், புதுமைக் கண்டுபிடிப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பு இன்று தொடங்கியது. விஞ்ஞானியாக ஒருநாள் செயல்படுங்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், நாடு முழுவதும் 83 இடங்களில் 2026 ஆகஸ்ட் 11,12 ஆகிய இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 10,000 அடி உயரத்திலுள்ள இமாச்சலப்பிரதேசத்தின் கிலாங் முதல் தெற்கே கேரளம் வரையிலும் மேற்கே டையூ முதல் கிழக்கே நாகலாந்து வரையிலும் உள்ள குழந்தைகளை இந்நிகழ்ச்சி சென்றடையும். இது அவர்களுக்கு அறிவியலை நெருக்கமாக்குவதுடன் அறிவியல் சார்ந்த ஆய்வில் ஆர்வத்தையும் தேடலையும் ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297527&reg=3&lang=1

****

TV/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297837) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu