தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காப்பீட்டு கணிப்பு நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 4:17PM by PIB Chennai
சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காப்பீட்டு கணிப்பு நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் இடையே கூட்டுப் பயிற்சித் திட்டத்தை பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் தொடங்கி வைத்துள்ளது.
புதுதில்லியில் ஆகஸ்ட் 10 அன்று, சமூகப் பாதுகாப்பில், காப்பீட்டு கணிப்பு தொடர்பான நடைமுறைகளில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் காப்பீட்டு கணிப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், சிறப்புப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு - சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் நேரடிப் பயிலரங்கில், (ஆகஸ்ட் 10–12, 2026), மே 25 முதல் ஆகஸ்ட் 9, 2026 வரை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிப் பயிற்சித் தொகுப்பைத் தொடர்ந்து இது நடைபெறுகிறது.
இந்தப் பயிலரங்கில் வரவேற்புரையாற்றிய பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் திரு. குமார் ரோஹித், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின், உயர்நிலை பயிற்சி நிறுவனமாக, அதிகாரிகளுக்கு சர்வதேச தரத்திலான கற்றல் வாய்ப்புகளை வழங்க வகை செய்கிறது என்று குறிப்பிட்டார். இந்த உத்திசார் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், தொழிலாளர் வைப்பு நிதி, தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர் வைப்புத் தொகையுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020'-ன் ஒத்த வகையில், நிறுவனத்திற்குள் காப்பீட்டு கணிப்புத் திறனை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகவும் அவசியமானதாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297635®=3&lang=1
(Release ID: 2297635)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2297816)
आगंतुक पटल : 15