அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:01PM by PIB Chennai
பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் சுமையைக் குறைப்பதற்கு, ஆரம்பகால, எளிதில் மேற்கொள்ளக்கூடிய பரிசோதனை மிகவும் அவசியமானதாக இருப்பதால், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், இன்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கிரிவா ஹெல்த்கேர் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை முன்கூட்டியே கண்டறிவதற்காக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, கையடக்க டிஜிட்டல் கிரிவாவிஷன் உற்பத்தி, வணிகமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு உதவிடும்.
உயிரித் தொழில்நுட்பத் துறையின் மூலம், கேரளா மாநிலம் கொல்லம் நகரில் உற்பத்திக்கான ஆலைகளை இந்நிறுவனம் அமைக்கும். இது வணிக அளவிலான உற்பத்திக்கும், இந்தத் தொழில்நுட்பத்தை பரவலாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
குறிப்பாக புத்தொழில், சமூக சுகாதார அமைப்புகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையை மேலும் எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கச் செய்வதையும், மேம்பட்ட மருத்துவ சாதனங்களில் உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதையும், இறக்குமதி செய்யப்படும் நோயறிதல் கருவிகள் மீதான சார்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297106®=3&lang=1
(Release ID: 2297106)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297430)
வருகையாளர் எண்ணிக்கை : 45