அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உலகளவில் போட்டியிடக்கூடிய உயிரித் தொழில்நுட்பச் சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 4:10PM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் உயிரித் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும், உள்நாட்டு உயிரித் தொழில்நுட்பம், உயிர் அறிவியல் சார்ந்த தயாரிப்புகள்,  தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கத் தொழில்துறைடனான தொடர்பை வலுப்படுத்தவும், அதிக தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலிருந்து வணிகமயமாக்கலுக்கு விரைவாகச் செல்லும் வகையில், இந்தியாவின் உள்நாட்டு உயிரித் தொழில்நுட்பத் திறன்கள், தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இடையே வலுவான தொடர்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

புதுதில்லியில் உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றத்தின் மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் இந்தியாவின் உயிரித் தொழில்நுட்பச் சூழல் அமைப்பிற்கான முதலீடு, தொழில்துறை பங்களிப்பு,  சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

உயிரித் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் - மேம்பாடு புத்தாக்க நிதியை செயல்படுத்துதல், உயிரித் தொழில்நுட்பத்தில் தொழில்துறை ஈடுபாட்டை வலுப்படுத்துதல், உயிர் அறிவியல் சார்ந்த உலகளவிலான திறன் மையங்களை உள்நாட்டு உயிரித் தொழில்நுட்பச் சூழல் அமைப்புடன் ஒருங்கிணைத்தல், உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளுக்கு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் பயன்படுத்துதல், இந்த அமைப்பின் செயல்பாட்டு வரம்பையும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தையும் அதிகரித்தல், உயிரித் தொழில்நுட்பத் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு வலுவான முதலீட்டாளர் தொடர்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297115&reg=3&lang=1

(Release ID: 2297115)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297428) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati