மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர் கல்வி நிறுவனங்களில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:19PM by PIB Chennai
தேசியக் கல்விக் கொள்கை 2020 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை செயல்படுத்தும் விதமாகப் பள்ளி, உயர் கல்வித் துறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வியில் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம் ஸ்ரீ திட்டம் அனைத்துக் குழந்தைகளும் உள்ளடக்கிய, சமத்துவ வகுப்பறைச் சூழலுடன் தரமான கல்வியை வழங்குவதற்கான அனைவருக்கும் கல்வித் திட்டம், 3-ம் வகுப்புக்குள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவை உறுதி செய்வதற்கான புரிதலுடன் வாசித்தல், எண்ணறிவில் தேர்ச்சி பெறுவதற்கான தேசிய முன்னெடுப்பாகும்.
மூன்று மாத கால விளையாட்டு வழிப் பள்ளித் தயாரிப்புத் தொகுப்பிற்கான வழிகாட்டுதல்கள் கொண்ட 'வித்யா-பிரவேஷ்' டிஜிட்டல்/ஆன்லைன்/ஒளிபரப்பு வழி கல்வி முயற்சிகளை ஒருங்கிணைத்து, பல்வேறு வழிகளில் கல்வி கிடைப்பதை எளிதாக்கும். பிரதமரின் இ - வித்யா திட்டம், அடிப்படை நிலைக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு வழி கற்றல்-கற்பித்தல் முறையில், மாய பெட்டி (ஜாதூ பிடாரா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களின் முழுமையான வளர்ச்சிக்கான தேசிய முன்னெடுப்பு 1.0, 2.0 மற்றும் 3.0, கல்வி ஆய்வு மையம், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம், கல்விச் சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், ஊக்குவிக்கவும் ஒருங்கிணைந்த தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கும் தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு, 15 வயது, அதற்கு மேற்பட்ட எழுத்தறிவற்ற அனைவரையும் இலக்காகக் கொண்ட புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம் அல்லது உல்லாஸ் திட்டம் போன்றவை அடங்கும்.
தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களுக்கு ஏற்ப, இந்திய மொழிகளில் உயர்தரக் கல்வியை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யவும், பள்ளி, உயர் கல்விக்கான புத்தகங்களை இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவில் வழங்கும் பாரதிய பாஷா புஸ்தக் திட்டம் 2025-26-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 22 இந்திய மொழிகளில் கல்வி உள்ளடக்கத்தை கிடைக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் அல்லது பாடப்பிரிவுகளில் மாணவிகளின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், சாத்தியக்கூறு இடைவெளி நிதியுதவி அல்லது மூலதன ஆதரவுத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதியை அமைப்பதாக 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிவித்துள்ளது.
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297131®=3&lang=1
(Release ID: 2297131)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297427)
வருகையாளர் எண்ணிக்கை : 68