வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
திரிபுராவிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக கடுகுத் தேன் ஏற்றுமதி செய்யப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 6:02PM by PIB Chennai
திரிபுராவைச் சேர்ந்த டெர்காங் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (எஃப்பிஓ) மூலம், 1 மெட்ரிக் டன் கடுகுத் தேனை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை அபேடா முன்னின்று மேற்கொண்டது. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியின் மூலம் உள்ளூர் தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகள், சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதன் வாயிலாக, இந்த ஏற்றுமதி அந்த அமைப்புக்கும் அப்பகுதிக்கும் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த முன்முயற்சி, உள்ளூர் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்வதையும், சர்வதேச விவசாயச் சந்தைகளில் தங்கள் பங்கேற்பை வலுப்படுத்துவதையும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி மூலம் சந்தைக்கான சிறந்த அணுகலைப் பெறுவது தேனீ வளர்ப்பாளர்களுக்குக் கூடுதல் வருமான வாய்ப்பை வழங்குவதுடன், தரத்தை மையமாகக் கொண்ட மற்றும் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட தேன் உற்பத்தி முறைகளை அவர்கள் அதிகம் பின்பற்றவும் ஊக்கமளிக்கும்.
திரிபுரா மாநில வேளாண் அமைச்சர் திரு ரத்தன் லால் நாத், இந்த முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297240®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297390)
வருகையாளர் எண்ணிக்கை : 47