மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டதன் மூலம் அதன் கல்வி ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு ஊக்குவிக்கப்படும்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 4:15PM by PIB Chennai

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்காக புதுதில்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (என்சிஇஆர்டி) சமர்ப்பித்த விண்ணப்பம் பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. இந்த நடைமுறை யுஜிசி-ன் 2023-ம் ஆண்டு விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டது. முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குமாறு குழு பரிந்துரைத்துள்ளது. யுஜிசி-ன் ஆலோசனையின்படி கல்வி அமைச்சகம் 30.03.2026 அன்று அறிவிக்கப்பட்டதன் மூலம் யுஜிசி சட்டம் 1956 பிரிவு 3-ன் கீழ் என்சிஇஆர்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று அறிவிக்கப்பட்டது. ஆராய்ச்சித் திட்டங்கள், முனைவர், புதிய பாடத்திட்டங்கள் ஆகியவற்றைத் தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் இது வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297126&reg=3&lang=1

****

TV/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297371) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu