மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க விரிவான நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 4:19PM by PIB Chennai

தேசியக் குற்ற ஆவணக் காப்பக (NCRB) தகவல்களின்படி, மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்கவும், அவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மனநல வழிகாட்டுதல் வழங்க மத்திய கல்வி அமைச்சகத்தின் 'மனோதர்பன்' (MANODARPAN) திட்டம், இலவச தொலைபேசி உதவி எண், 'சஹயோக்' மற்றும் 'பரிச்சர்ச்சா' கலந்துரையாடல்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நவோதயா பள்ளிகளில் 830 ஒப்பந்த ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கேந்திரிய வித்யாலயாக்களிலும் ஆலோசகர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் 21 மொழிகளில் ராகிங் (Ragging) எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மற்றும் 24x7 கட்டணமில்லா உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உயர்கல்வி நிறுவனங்களுக்கான மனநல வழிகாட்டுதல்கள், பயிற்சி மையங்களுக்கான நெறிமுறைகள் (2024) ஆகியவை வெளியிடப்பட்டு, மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஐடி, ஐஐஎம்  போன்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் பிரத்யேக மனநல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் 1.81 லட்சத்திற்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் மனநலச் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'டெலி-மானஸ்' (Tele-MANAS) செயலி மற்றும் உதவி எண் மூலம் இதுவரை 43.25 லட்சத்திற்கும் அதிகமான அழைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், மக்களவையில் இன்று அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297132&reg=3&lang=1

****

TV/SE/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297327) வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi