இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 3:49PM by PIB Chennai
கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையாகும். ஆசிரியர்களின் பணி நியமனம், பணி நிபந்தனைகள், பணி அமர்த்தல் போன்ற நடவடிக்கைகள் அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 01.09.2025 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) ஒன்றாகும் என்று கூறியுள்ளது. இச்சட்டத்தின் வரம்பிற்குள் வரும் பள்ளிகளில், ஆசிரியராகப் பணியில் சேர இத்தேர்வு கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள ஆசிரியர்கள் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள், இந்தத் தேர்வை எழுதி நிர்ணயிக்கப்பட்ட தகுதியைப் பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர், இவ்வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுக்களை விசாரித்து, 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கான காலக்கெடுவை 31.08.2027-லிருந்து 31.08.2028 வரை நீட்டித்துள்ளது. மேலும், தகுதியுள்ள ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியைப் பூர்த்தி செய்வதற்கு நியாயமான வாய்ப்பை வழங்கும் வகையில், அந்தந்த அரசுகள் அல்லது அதிகார அமைப்புகள் ஆசிரியர் தகுதித் தேர்வை அவ்வப்போது, குறிப்பாக ஆண்டுக்கு இருமுறை, அடுத்தடுத்த தேர்வுகளுக்கு இடையே ஆறு மாத இடைவெளியுடன் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297088®=3&lang=1
***
SS/SV/SH