சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 3:01PM by PIB Chennai

அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், சுற்றுலா மேம்பாட்டிற்காக விளம்பர நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், திருவிழாக்கள் நடத்துவதற்கு மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். 2013-ம் ஆண்டு முதல் சர்வதேச சுற்றுலா சந்தை நிகழ்ச்சி வடகிழக்குப் பகுதியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாகவும், அண்மையில் இந்த நிகழ்ச்சி சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்கில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுற்றுலா திட்டம் 2.0, பிரசாத் போன்ற திட்டங்களின் கீழ் வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா மையங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். டிஜிட்டல் தளம் வாயிலாக உலக அளவில் வடகிழக்கு சுற்றுலா மையங்கள் பிரபலப்படுத்தப்பட்டு வருவதாகவும், பிராந்திய விமான இணைப்புத் திட்டத்தின் கீழ் திப்ரூகர், திமாபூர், இம்பால், அகர்தலா, ஐஸ்வால், குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் சிறப்புச் சுற்றுலா விமானச் சேவைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார் .

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297053&reg=3&lang=1

 

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297276) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese