சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மலைப்பகுதி சிறுபான்மையின சமூகங்களுக்காக செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நலத்திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 2:07PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், நிலப்பரப்பு அல்லது புவிசார் சூழல்களைப் பொருட்படுத்தாமல், மேற்கு வங்கம் உள்ளிட்ட மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள ஆறு சிறுபான்மையின சமூகங்களின் (பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், இஸ்லாமியர்கள், பார்சிகள், சீக்கியர்கள்) சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:
1. பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டம் (பிஎம் விகாஸ்)
சிறுபான்மையின சமூகங்களுக்குக் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு போன்ற வாய்ப்புகளை உருவாக்க, ஐந்து வாழ்வாதாரத் திட்டங்களை ஒருங்கிணைத்து, பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டம் (பிஎம் விகாஸ்) என்ற ஒருங்கிணைந்தத் திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
2. பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்
மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் இந்தத் திட்டம், நாடு முழுவதும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, பெண்கள் சார்ந்த திட்டங்கள், குடிநீர், துப்புரவு, விளையாட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிற துறைகளில் சமூக உள்கட்டமைப்பிற்கான வசதிகள் உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு, நிதிக் கழகத்தின் சலுகையுடன் கூடிய கடன் திட்டங்கள்
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு, நிதிக் கழகம், மலைப்பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின சமூகங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சலுகைகளுடன் கூடிய நிதிசார், கடனுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரென் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297026®=3&lang=1
***
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2297230)
வருகையாளர் எண்ணிக்கை : 50