சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையின மகளிருக்காக தலைமைத்துவ மேம்பாடு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது – மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 2:05PM by PIB Chennai

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் முந்தைய திட்டங்களின் கீழ், அரசமைப்புகள், வங்கிகள், அனைத்து நிலைகளிலும் உள்ள இதர நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு, கருவிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மகளிருக்கு நலன் பயக்கும் வகையில், அவர்களின் நம்பிக்கையைக் கட்டமைக்கும் நோக்கத்தில் சிறுபான்மையின மகளிரின் தலைமைத்துவ மேம்பாடு என்ற திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம், தலைமைப் பண்புகளை மேம்படுத்துதல், உரிமைகள், தகுதிகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல், சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், ஒடிசா உட்பட நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட திட்ட அமலாக்க முகமைகள் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297024&reg=3&lang=1  

***

SS/IR/GS/KR   

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297181) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi