நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காலாவதியான நிலக்கரிச் சுரங்கங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு மாற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 3:18PM by PIB Chennai

காலாவதியான நிலக்கரிச் சுரங்கங்களை அறிவியல் முறையில் மூடி, அவற்றைச் சூழலியல் பூங்காக்களாகவும் மக்கள் பயன்பாட்டுச் சொத்துக்களாகவும் மாற்றுவதில் சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்பான எஸ்சிஇஎல், இதுவரை 28 சுரங்கங்களை அறிவியல் முறையில் மூடியுள்ளது. இதில் 2025-26 நிதியாண்டில் மட்டும் ஒரே ஆண்டில் 25 சுரங்கங்களை மூடி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்தியாவில் அறிவியல் ரீதியாக மூடப்பட்ட மொத்த சுரங்கங்களில் 67 சதவீதம் எஸ்சிஇஎல் நிறுவனத்தைச் சார்ந்தவையாகும்.

இவ்வாறு மூடப்பட்ட சுரங்க நிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், பூங்காக்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பள்ளிகள் மற்றும் சமூக நல மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், மீன் வளர்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் இந்நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.

சுரங்கப் பணியின் நிறைவு என்பது சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய தொடக்கம் என்று எஸ்சிஇஎல் தலைவர் ஹரிஷ் துகான் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295965&reg=3&lang=1

****

TV/EA/ RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296871) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu