வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் நகர்ப்புற வீடுகள் திட்டத்தில் மைல்கல் சாதனை - 1.25 கோடி வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 1 கோடி வீடுகள் ஒப்படைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 3:17PM by PIB Chennai

பிரதமரின் நகர்ப்புற வீடுகள் திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ் 1.25 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இவற்றில், 1 கோடிக்கும் அதிகமான வீடுகள் நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த மைல்கல்லைத் தொடர்ந்து, தகுதியுள்ள நகர்ப்புறக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீட்டு வசதி கிடைப்பதை விரிவுபடுத்தும் நோக்கில், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் செயலாக்கத்தை அரசு தொடர்ந்து துரிதப்படுத்தி வருகிறது.

இந்த உறுதிப்பாட்டிற்கு இணங்க, இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மத்திய ஒப்புதல், கண்காணிப்புக் குழுவின் 8-வது கூட்டம் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு சதேந்திர சிங் தலைமையில் 2026 ஆகஸ்ட் 6-ம் தேதி புது தில்லியில் உள்ள சங்கல்ப் பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைவருக்கும் வீட்டு வசதி அமைப்பின் இணைச் செயலாளரும் திட்ட இயக்குநருமான திரு குல்தீப் நாராயண், நிதி ஆலோசகர் திரு சஞ்சீத், துணை தலைமை இயக்குநர் திரு ஆர்.கே. கௌதம், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த திட்ட இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு 2.09 லட்சம் வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய ஒப்புதல்களுடன், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 18.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட 1.25 கோடி வீடுகளில், 1 கோடி வீடுகள் பெண்களுக்கு (குடும்பத் தலைவியின் பெயரிலோ அல்லது கூட்டு உரிமையிலோ) ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296797&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296863) வருகையாளர் எண்ணிக்கை : 68
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati