மாநிலங்களவைச் செயலகம்
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 165-வது அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 7:36PM by PIB Chennai
மாநிலங்களவை உறுப்பினரான திரு பிரிஜ் லால் தலைமையில் இயங்கும், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, 'மாற்றுச் சச்சரவு தீர்வுச் சூழலியலை ஆதரிப்பதற்கான நிறுவன ரீதியான வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்' என்ற தலைப்பிலான தனது 165-வது அறிக்கையை 2026 ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்தது.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட குழு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறைச் செயலாளரின் கருத்துகளையும் கேட்டறிந்தது. மேலும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித் துறைச் செயலாளர், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் தில்லி சர்வதேச நடுவர் மன்றத்தின் இணைப் பதிவாளர் ஆகியோரின் கருத்துகளையும் குழு கேட்டறிந்தது.
இந்த அறிக்கை 2026 ஆகஸ்ட் 5 அன்று குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முழு அறிக்கையையும் https://sansad.in/rs/committees/18?departmentally-related-standing-committees என்ற இணையதளத்தில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296302®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296820)
வருகையாளர் எண்ணிக்கை : 35