சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த மூன்று நிதியாண்டுகளில் பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கர்நாடகாவிற்கு ரூ.1,178.20 கோடி மத்திய அரசின் பங்கு விடுவிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 12:52PM by PIB Chennai

கடந்த மூன்று நிதியாண்டுகளில், பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், கர்நாடகாவில் உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசின் மொத்தப் பங்காக ரூ.1,178.20 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பட்டியல் வகுப்பினரின் நலனுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு தொடர்பான மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சமூக நீதி அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதாவலே இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கர்நாடகாவில் பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக வழங்கப்பட்ட நிதி, 2023-24-ம் ஆண்டில் ரூ. 421.08 கோடியாகவும், 2024-25-ம் ஆண்டில் ரூ. 422.90 கோடியாகவும், 2025-26-ம் ஆண்டில் ரூ. 334.22 கோடியாகவும் இருந்தது. இந்த மூன்று நிதியாண்டுகளில் மொத்த நிதி ரூ.1,178.20 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296752&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296789) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada