மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்றம் ஆகியவை தொடர்பான துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கைகள் சமர்ப்பிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 7:30PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மேதா விஷ்ராம் குல்கர்னி தலைமையிலான, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு, 2026 ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை பின்வரும் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது : -

தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நீர் மாசுபாடு குறித்த பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை, மாசுபாட்டைக் குறைப்பதற்காக பல்வேறு முகமைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை;

'சிஎஸ்ஐஆர்-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு, சிஎஸ்ஐஆர்-மரபணுவியல், ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு தொடர்பான பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை;

'டாடா நினைவு மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திய அணுசக்தி கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு தொடர்பான பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை.

குழுவானது வரைவு அறிக்கைகளைப் பரிசீலித்து , 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதி நடைபெற்ற தனது கூட்டத்தில் அதனை ஏற்றுக்கொண்டது.

இந்த அறிக்கைகள் https://sansad.in/rs என்ற இணையதளத்திலும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296292&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296644) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी