PIB Backgrounder
azadi ka amrit mahotsav

அரசின் மின்னணு சந்தை வாயிலான கொள்முதல் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 08 AUG 2026 4:37PM by PIB Chennai

அரசு மின்னணு சந்தை, வழக்கமான செயல்முறைகளை வெளிப்படையான, தொழில்நுட்பம் வாயிலாக மேற்கொள்ளப்படும்  டிஜிட்டல் தளமாக மாற்றுவதன் மூலம், அரசின் கொள்முதல் சார்ந்த நடவடிக்கைகளை மாற்றியமைத்துள்ளது. முழுமையான  கொள்முதல் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், அரசின் மின்னணு சந்தையின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை மேம்படுத்தியுள்ளது, அதே நேரத்தில், பரிவர்த்தனைகளுக்கான  செலவுகளையும் வெகுவாகக் குறைத்துள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், சமூக ரீதியாக பின்தங்கிய நிறுவனங்களுக்கான பிரத்யேக முயற்சிகள், அரசு சந்தைகளுக்கான நடைமுறைகளை  விரிவுபடுத்தி, கொள்முதல் நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றியமைத்துள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் கொள்முதல் சூழலமைப்பின் ஒரு முக்கிய தலமாக, அரசு மின்னணு சந்தையின் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா,  வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு உதவிடுகிறது.

ஆண்டுதோறும், அரசுகள் பல்வேறு துறைகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சேவைகளைக் கொள்முதல் செய்கின்றன. மருத்துவ உபகரணங்கள், வகுப்பறை தளவாடங்கள் முதல் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் தீர்வுகள் வரை, கொள்முதல் என்பது பொது நிர்வாகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆதரிக்கிறது.

பாரம்பரிய கொள்முதல் நடவடிக்கைகளில் பெரும்பாலும் காகிதப் பயன்பாட்டுடன், பல்வேறு நிலைகளில் ஒப்புதல், நீண்ட ஒப்பந்தப்புள்ளி கோரல் நடைமுறைகள் ஆகியவை அடங்கும். இது செயல்திறன்,  வெளிப்படைத் தன்மையைக் கட்டுப்படுத்தியது. இந்த அமைப்பை மாற்றியமைப்பதற்காக, மத்திய அரசு 2016 ஆகஸ்ட் 9 அன்று, மத்திய அரசின் மின்னணு சந்தையை அறிமுகப்படுத்தியது.

பொதுத்துறை சார்ந்த கொள்முதலில், புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் அரசின் மின்னணு சந்தை, ஒருங்கிணைந்த, முழுமையான டிஜிட்டல் தளமாகும். இது அரசிற்காகக்  கொள்முதல் செய்பவர்கள், பாதுகாப்பான, காகிதப் பயன்பாடற்ற, ரொக்கமில்லா, தொடர்பற்ற சூழல் அமைப்பின் மூலம், பொருட்கள் சேவைகளைக் கொள்முதல் செய்ய உதவுகிறது. இது வாங்குபவர்களையும், விற்பவர்களையும்  பொதுவான இணையவழிச் சந்தையில் ஒன்றிணைத்து, கொள்முதல் நடவடிக்கைகளை மேலும் வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், திறமையானதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் உருவாக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296546&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2296599) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu