சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
முதுநிலை வர்த்தக மேலாண்மை படிப்பு வரை, உயர்தரக் கல்விக்கான நிதியுதவி
प्रविष्टि तिथि:
08 AUG 2026 2:04PM by PIB Chennai
உயர்கல்வி, தொழில்சார் கல்வி ஆகியவை இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள பணிச் சூழலுடன் கூடிய சிறந்த வாழ்க்கையை உருவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள், தரமான உயர்கல்வியைத் தொடர்வதற்கு நிதி நெருக்கடி பெரும்பாலும் தடையாக அமைகின்றன.
கல்விக்கான நிதியுதவி ஒரு மாணவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மாணவர் தெலு ஜான்சி விஜய் கிருஷ்ணா திகழ்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்த இவர், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் பட்டியலிடப்படாத பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்லூரிக் கல்வித் திட்டம் மூலம் கிடைத்த நிதியுதவியுடன், மிகுந்த தன்னம்பிக்கையுடனும், கவனத்துடனும், தனது முதுநிலை வர்த்தக மேலாண்மை படிப்பைத் தொடர முடிந்தது.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் நிதி சார்ந்த சிக்கல்களையும் எதிர்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவரான விஜய் கிருஷ்ணா, உயர்கல்வி பயிலும்போது, பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான தயாரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய செலவுகளைச் சமாளிப்பது, அவருக்கு பெரிய சவாலாக இருந்தது. நிதி நெருக்கடிகளுடன், கிரீமி லேயர் அல்லாத பிரிவைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பின்னணியிலிருந்து உயர்கல்வி, எம்பிஏ பயில்வது தொடர்பான சமூக, நிதி ரீதியான தடைகளையும் அவர் எதிர்கொண்டார்.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொழில்முறை, நிர்வாகத் திறன்களை வளர்த்துக்கொண்டு, நிலையான, மாற்றத்தை ஏற்படுத்தும் பணிச் சூழலுடன் கூடிய வாழ்கையை உருவாக்க வேண்டும் என்பதில் விஜய் கிருஷ்ணா உறுதியாக இருந்தார். வர்த்தகம், புத்தொழில் நிறுவனங்கள் மூலம் இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்வதே அவரது நீண்டகால லட்சியமாகும். நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும், அவரது தந்தையும் குடும்பத்தினரும் அவரது கல்வி முயற்சிகளையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் தொடர்ந்து ஊக்குவித்து வந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296479®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2296575)
आगंतुक पटल : 12