சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகம், மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றங்களில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் விபரம்

प्रविष्टि तिथि: 08 AUG 2026 1:27PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பு, வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகளை, பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும், கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

இதன்படி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் விவரங்கள் வருமாறு:

தமிழகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, வழக்கறிஞர் திரு  கோவிந்தராஜன் கிருஷ்ணசுவாமி, வழக்கறிஞர் திரு ரஜ்னிஷ் பதியில், வழக்கறிஞர் திரு ரமேஷ் நடராஜன், வழக்கறிஞர் திரு ஜி.கே. முத்துக்குமார், வழக்கறிஞர் திரு ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக, வழக்கறிஞர் திரு  ரவிக்குமார் சங்கரநாராயணன், வழக்கறிஞர் திரு திலீப் குமார் நாகராஜன், வழக்கறிஞர் திரு  எல்லப்பன் மனோகரன், நீதித்துறை அதிகாரி டாக்டர் பி. முருகன், நீதித்துறை அதிகாரி திருமதி எம்.டி. சுமதி, நீதித்துறை அதிகாரி திருமதி எஸ். அல்லி, நீதித்துறை அதிகாரி திருமதி சி. திருமகள், நீதித்துறை அதிகாரி திரு சண்முகம் கார்த்திகேயன், நீதித்துறை அதிகாரி திரு முருகேசன் பாலுச்சாமி, நீதித்துறை அதிகாரி திரு என். குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கல்கத்தா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக,  வழக்கறிஞர் திரு ஆர்யக் தத், வழக்கறிஞர் திரு அதாரூப் பானர்ஜி, வழக்கறிஞர் திரு சந்தீப் குமார் தே, வழக்கறிஞர் திரு பார்த்த பிரதிம் ராய், வழக்கறிஞர் திரு சுதீப் தேப், வழக்கறிஞர் திரு அனுஜ் சிங், வழக்கறிஞர் திரு அர்ஜுன் ராய் முகர்ஜி, வழக்கறிஞர் திரு ரிஷாத் மெடோரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக, வழக்கறிஞர் திரு ராகவேந்திர சீதாராம் ஸ்ரீவத்சா, வழக்கறிஞர் திருமதி ஹேமா குல்கர்னி, வழக்கறிஞர் திரு சுப்ரமண்ய ரங்கராவ், வழக்கறிஞர் திரு விவேகானந்தா தடகவாடி பிரகாஷ், வழக்கறிஞர் திரு பிரமோத் பக்கேஸ்வரா, வழக்கறிஞர் திரு சாந்தி பூஷன் ஹோம்ப் கௌடா ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, வழக்கறிஞர் திரு அமித் லஹோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

***

(Release ID: 2296475)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2296516) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada