அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் கீழ் ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு
प्रविष्टि तिथि:
08 AUG 2026 9:48AM by PIB Chennai
சிஎஸ்ஐஆர் - இன் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் கீழ், மூன்றாம் கட்டத்தின் (2025-30) முதல் ஆண்டுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடும் கண்காணிப்புக் குழுவின் கூட்டமும் புனேவில் நடைபெற்றது. காசியாபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்-மனித வள மேம்பாட்டு மையமும் புனேவில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய வேதியியல் ஆய்வகமும் இணைந்து, 2026 ஆகஸ்ட் 06, 07 ஆகிய தேதிகளில் புனேவில் இக்கூட்டத்தை நடத்தின.
இந்த இரண்டு நாள் மாநாட்டில், சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் மூன்றாம் கட்டத்தின் முதல் ஆண்டில் அடைந்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வகங்களிடையே அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும், திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாகவும் இது அமைந்தது.
சிஎஸ்ஐஆர்-என்சிஎல் விஞ்ஞானி டாக்டர் ராஜேஷ் ஜி. கொன்னாடே பேசுகையில், புத்தாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிஎஸ்ஐஆர்-எச்ஆர்டிசி-ன் விஞ்ஞானியும் திறன் ஒருங்கிணைப்பு முதன்மை ஆய்வாளருமான, டாக்டர் வினய் குமார், மாநாட்டின் நோக்கங்களை எடுத்துரைத்தார். அத்துடன் 2025-26-ம் ஆண்டில் சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் கீழ் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை அவர் வழங்கினார்.
முதல் நாளில், பங்கேற்ற 37 சிஐஸ்ஐஆர் ஆய்வகங்களின் திறன் ஒருங்கிணைப்பாளர்கள், தாங்கள் நடத்திய திட்டங்கள், பயிற்சி, புதுமையான முன்முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் எதிர்கால செயல் திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்து, தங்களின் வருடாந்திர முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
இரண்டாம் நாளில் இரண்டு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சி, ஒரு திறந்த கலந்துரையாடலைக் கொண்ட நிறைவு அமர்வுடன் முடிவடைந்தது. அதில், திறன் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296442®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2296509)
आगंतुक पटल : 5