ஆயுஷ்
சோவா-ரிக்பா சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான மருத்துவ அமைப்பாக உருவெடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
प्रविष्टि तिथि:
07 AUG 2026 5:20PM by PIB Chennai
தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தின் (NISR) 2-வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், சோவா-ரிக்பா மருத்துவ முறையை உலகளவில் ஆதாரப்பூர்வமான அறிவியல் மருத்துவ அமைப்பாக நிலைநிறுத்துவதே முதன்மை இலக்காகும் என கூறினார். பாரம்பரிய அறிவியலை நவீன ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய தரநிலைகளுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், லடாக் மட்டுமின்றி முழு இமயமலைப் பகுதியின் மருத்துவப் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் மையமாக தேசிய சோவா-ரிக்பா நிறுவனம் திகழ்வதாகச் சுட்டிக்காட்டினார்.
போதி மொழியில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கி மொழிபெயர்க்க வேண்டும் என்றும், அரிய மூலிகைகளைப் பாதுகாப்பதில் உள்ளூர் சமூகங்களை இணைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இத்துறையில் சிறப்பான பணியாற்றி 2026-ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற இந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா குர்மெட்டுக்கு நிர்வாகக் குழு வாழ்த்து தெரிவித்தது.
இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296133®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2296382)
आगंतुक पटल : 3