மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 84-வது ஆண்டு நினைவு தினம்: மாநிலங்களவைத் தலைவர் புகழஞ்சலி

प्रविष्टि तिथि: 07 AUG 2026 1:29PM by PIB Chennai

நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய மைல்கல்லான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 84-வது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட் 9 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, மாநிலங்களவைத் தலைவர் அவையில் சிறப்புரை ஆற்றினார்.

மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் 1942 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்ட இந்த இயக்கம், சுதந்திரப் போராட்டத்திற்குத் தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். காந்தியடிகளின் "செய் அல்லது செத்து மடி" என்ற முழக்கம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஒன்றிணைத்து விடுதலை நோக்கில் எழுச்சி பெறச் செய்ததாகத் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இணையற்ற தியாகங்கள், வீரம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற வழிவகுத்தன என்று சுட்டிக்காட்டிய தலைவர், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்களை எழுந்து நின்று மௌனம் அனுசரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295898&reg=3&lang=1

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2296372) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu