ரெயில்வே அமைச்சகம்
காஷ்மீரை இணைக்கும் புதிய ரயில் பாதை: விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் திறக்கும் புதிய வாய்ப்புகள்!
प्रविष्टि तिथि:
07 AUG 2026 3:08PM by PIB Chennai
காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் அனைத்துக் காலநிலைகளிலும் இணைக்கும் 272 கி.மீ நீளமுள்ள ‘உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா’ ரயில் திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைத்துள்ளது.
உலகிலேயே மிக உயர்ந்த செனாப் ரயில் பாலம் மற்றும் இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலமான அஞ்சி காட் பாலம் ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும். இச்சேவையால் ஆப்பிள், உலர்ந்த பழங்கள், பஷ்மினா சால்வைகள் போன்ற காஷ்மீரின் பாரம்பரியப் பொருட்களை நாட்டின் பெரிய சந்தைகளுக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடிகிறது. இது அப்பகுதி விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பொருளாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவுகிறது.
மேலும் ஜம்மு தாவி, புட்காம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295954®=3&lang=1
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2296315)
आगंतुक पटल : 16