ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வேயின் கடன் திருப்பிச் செலுத்தும் நிலை சீராக உள்ளது: மத்திய அரசு
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 4:32PM by PIB Chennai
இந்திய ரயில்வே நிதி நிறுவனம் (IRFC), இந்திய ரயில்வேயின் நிதித் தேவைகளுக்காகச் சந்தையிலிருந்து கடன் திரட்டும் நிதியமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள், ரயில் பெட்டிகள், எஞ்ஜின்கள் வாங்குவதற்கும், ரயில்வேயுடன் தொடர்புடைய எரிபொருள் துறை, நிலக்கரி, கிடங்குகள் போன்ற துறைகளுக்கும் இது நிதியுதவி வழங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ரயில்வேக்குத் தேவையான மொத்த வரவு செலவுத் திட்ட ஆதரவை போதிய அளவில் வழங்கி வருகிறது. இதனால் உள்கட்டமைப்பு, ரயில்வே சொத்துகள் உருவாக்கத்திற்கு வெளிப்புற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் செலுத்திய அசல், வட்டி விவரங்களின்படி, கடன் திருப்பிச் செலுத்தும் நடைமுறை சீரான நிலையை அடைந்துள்ளது. 2021-22 நிதி ஆண்டில் திரும்ப செலுத்தப்பட்ட மொத்தக் கடன் தொகை ரூ.28,702 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதி ஆண்டில் ரூ.46,538 கோடியாக உயர்ந்துள்ளது. கொவிட் பெருந்தொற்றின் சவால்களுக்கு மத்தியிலும் இரயில்வே நிதி மேலாண்மை சீரானதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296057®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2296299)
வருகையாளர் எண்ணிக்கை : 52