அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை சுமார் 350-லிருந்து கிட்டத்தட்ட 2.4 லட்சமாக அதிகரித்துள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 07 AUG 2026 4:17PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற 3-வது இந்திய சர்வதேச நிதித் தொழில்நுட்பத் திருவிழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சிறப்புரையாற்றினார். 'ஜன் தன் திட்டம்' போன்ற தொலைநோக்கு முயற்சிகள் மூலம் நாடு நிதிச் சேர்க்கையில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது நிதி அதிகாரமளித்தல் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கி இந்தியா நகர வேண்டிய தருணம் இது என்றும் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு மற்றும் பிளாக்செயின் ஆகியவை ஃபின்டெக் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டார். தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளில் 2,000 கி.மீ பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்பை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மூன்றே ஆண்டுகளில் 1,000 கி.மீ-க்கும் அதிகமாக சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கட்டமைப்பு 350-லிருந்து கிட்டத்தட்ட 2.4 லட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். விண்வெளி, அணுசக்தி போன்ற உத்திசார் துறைகளில் தனியார் பங்கேற்பை அனுமதித்ததன் மூலம் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் நடப்புத் தசாப்தத்தின் இறுதிக்குள் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரித் தொழில்நுட்பத் துறையில் மரபணு இந்தியா திட்டத்தின் (Genome India Programme) கீழ் 10,000 பேரின் மரபணுக்கள் வெற்றிகரமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296034&reg=3&lang=1

 

****

TV/SE/SH

 


(रिलीज़ आईडी: 2296283) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी