மருந்துகள் துறை
இந்திய மருத்துவக் கருவித் துறை 2047-ம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலர் அளவை எட்டும்: ஃபிக்கி அறிக்கை கணிப்பு
प्रविष्टि तिथि:
07 AUG 2026 4:44PM by PIB Chennai
'இந்திய சுகாதாரத் துறையில் மருத்துவ உபகரணங்களின் சேவை மற்றும் பராமரிப்பு – பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான மருத்துவ சாதனப் பராமரிப்புச் சூழலை நோக்கி முன்னேறுதல்' என்ற தலைப்பில் ஃபிக்கி மற்றும் டியூஏ கன்சல்டிங் ஆகியவை வெளியிட்ட வெள்ளை ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் மருத்துவ சாதனத் துறை 2047-ம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், உலகளாவிய சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துத் துறை மற்றும் ஃபிக்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இந்திய மருத்துவ சாதனம் 2026' நிகழ்வின் 9-வது பதிப்பின் தொடக்க விழாவில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
தற்போது சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் மருத்துவ சாதனத் துறை, இந்த தசாப்தத்திற்குள் 30 முதல் 50 பில்லியன் டாலர் மதிப்பையும், 2047-ம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலர் மதிப்பையும் எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் தேவைகளின் அதிகரிப்பு, மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உள்நாட்டு உற்பத்திக்கான அரசின் ஆதரவு மற்றும் உலகளாவிய மருத்துவத் தொழில்நுட்ப மையமாக மாற வேண்டும் என்ற நாட்டின் லட்சியம் ஆகியவை இந்த விரைவான வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வெள்ளை அறிக்கையின்படி, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் மற்றும் 'மருத்துவக் கருவிகள் துறையை வலுப்படுத்துவதற்கான திட்டம்' போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது; இந்தத் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரித்ததுடன், உலகளாவிய அளவில் இந்தியாவின் போட்டித்தன்மையையும் மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், இத்துறையின் நிலையான வளர்ச்சி என்பது உற்பத்தியை மட்டும் சார்ந்திருக்காமல், மருத்துவக் கருவிகளுக்கான சேவை, பராமரிப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டுக் கால மேலாண்மை ஆகியவற்றுக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த ஒரு சூழலியலை உருவாக்குவதையும் சார்ந்திருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296077®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2296279)
आगंतुक पटल : 8