அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது: மத்திய அரசு
प्रविष्टि तिथि:
07 AUG 2026 3:21PM by PIB Chennai
ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை, தகுதி சார்ந்த மதிப்பீடு, நலன்களின் முரண்பாடுகளைத் தவிர்க்கும் விதிகள் துல்லியமாகப் பின்பற்றப்படுவதாக மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்குத் தொடர்புடைய திட்டங்களின் மதிப்பீட்டிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகளுக்கு எவ்வித வாக்களிக்கும் உரிமையும் இன்றி, சுயாட்சி பெற்ற தொழில்முறை நிபுணர்கள் அடங்கிய முதலீட்டுக் குழுவே தகுதியின் அடிப்படையில் திட்டங்களைத் தேர்வு செய்கிறது. தகுதியுள்ள திட்டங்களுக்குப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நிதி வழங்கப்படுகிறது.
இத்திட்டம் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நேரடி நிதி உதவியாக அல்லாமல், ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் எளிய கடனுதவியாகும். இந்தியாவில் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும், நாட்டின் தொழில்நுட்பத் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யவும் நேர்மையான, வெளிப்படையான முறையில் நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படுவதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295967®=3&lang=1
***
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2296258)
आगंतुक पटल : 7