பிரதமர் அலுவலகம்
கைத்தறித் துறை இந்தியாவின் மிகப்பெரிய நாகரிகப் பலங்களில் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 2:51PM by PIB Chennai
தேசிய கைத்தறி தினமான இன்று, மத்திய அமைச்சர் திரு கிரிஜராஜ் சிங் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நாகரிகப் பலங்களில் ஒன்றாகக் கைத்தறித் துறை திகழ்வதையும், இந்திய ஜவுளித் துறையின் எண்ணற்ற பிராந்தியப் பாரம்பரியங்களையும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
கைத்தறித் துறையின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், பாரம்பரியம் - தொழில்நுட்பம், படைப்பாற்றல் - தொழில்முனைவு ஆகியவற்றை ஒன்றிணைக்க இந்தியாவின் இளைஞர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்திருப்பதை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று இந்தியா தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வேளையில், இந்திய ஜவுளித் துறையின் எண்ணற்ற பிராந்தியப் பாரம்பரியங்களைச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய அமைச்சர் திரு கிரிஜராஜ் சிங், நாட்டின் மிகப்பெரிய நாகரிகப் பலங்களில் ஒன்றாகக் கைத்தறி கலையை பாராட்டியுள்ளார்.
கைத்தறித் துறையின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்கவும், அதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒன்றிணைக்க இந்தியாவின் இளைஞர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்."
***
TV/SE/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296178)
வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam