தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மத்தியப்பிரதேசத்தில் ஆபத்தான முறையில் ஆற்றுப்பாதையைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 11:00AM by PIB Chennai

மத்தியப்பிரதேச மாநிலம் விதீஷா மாவட்டத்தில் உள்ள கக்ரௌவா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பெத்வா ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்ல தடுப்பணையின் தூண்கள் மீது ஆபத்தான முறையில் தாண்டிச் செல்வதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது.

சாலை வழியே சென்றால் 13 கி.மீ சுற்றிச் செல்லவேண்டும் என்பதால், 1.5 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல 5 மாணவிகள் உட்பட 9 குழந்தைகள் தினமும் இந்த ஆபத்தான வழியைப் பயன்படுத்துவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்தி உண்மையெனில், இது தீவிர மனித உரிமை மீறலாகும் என்று ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ஏ மற்றும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆகியவற்றின்படி குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலில் கல்வி பயிலும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான போக்குவரத்து வசதி இல்லாதது கண்ணியத்துடன் கல்வி பயிலும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்தியப்பிரதேச அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295841&reg=3&lang=1

***

TV/EA/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2295921) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu