அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குவாண்டம் வலை பின்னலை திறம்பட இணைப்பதற்கான புதிய கட்டமைப்பு: இந்திய ஆய்வாளர்கள் சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2026 4:09PM by PIB Chennai

எதிர்காலக் குவாண்டம் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை வடிவமைப்பதற்கு உதவும் எளிமையான மற்றும் திறமையான புதிய வழிமுறையை இந்திய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தீப் நாத் மற்றும் பேராசிரியர் சௌமென் ராய் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வுக்கட்டுரை 'பிசிக்கல் ரிவ்யூ ஏ'  சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

குவாண்டம் நெட்வொர்க்குகளில் தகவல்களைத் துல்லியமாக அனுப்ப வலுவான இணைப்புகள் தேவைப்படும் நிலையில், நடைமுறையில் ஏற்படும் இரைச்சல்கள் காரணமாக அவை பலவீனமடைகின்றன, ஏற்கனவே உள்ள முறைகளில் முறைகளில் இடைப்பட்ட நிலையங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் நெட்வொர்க் வளங்கள் வீணாகின.

இதற்குத் தீர்வாக 'பொதுவான இணையுறுமைப் பரவல்' (GCP) எனும் புதிய வடிவியல் வழிமுறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது நிலையங்களைத் துண்டிக்காமல், குறுகிய பாதைகள் வழியே குறைந்த தொடக்க இணைப்பைக் கொண்டே வலுவான குவாண்டம் வலை பின்னலை உருவாக்க உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295481&reg=3&lang=1                            

***

TV/EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2295721) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी