நிலக்கரி அமைச்சகம்
மின்சாரத் துறைக்கான நிலக்கரி விநியோகம் போதுமான அளவில் உள்ளது: மத்திய அரசு
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 3:51PM by PIB Chennai
நாட்டின் மின்சாரத் துறைக்கான நிலக்கரி விநியோகம் போதுமான அளவில் உள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2026 ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 69.75 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.51 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி விநியோகம் 18.03 சதவீத வளர்ச்சியுடன் 86.85 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி வரத்து ஜூலை மாதத்தில் 68.83 மில்லியன் டன்னாக இருந்தது. ஆகஸ்ட் 04 நிலவரப்படி அனல்மின் நிலையங்களில் 34.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. சுரங்கங்கள், போக்குவரத்தில் உள்ள நிலக்கரியையும் சேர்த்து மொத்தம் 148 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இது நாட்டின் மின்சாரத் தேவையை சுமார் 62 நாட்களுக்குப் பூர்த்தி செய்யப் போதுமானதாகும். நாட்டின் தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை அடைவதற்கும், தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் நிலக்கரி அமைச்சகம் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295461®=3&lang=1
***
TV/PD/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2295671)
வருகையாளர் எண்ணிக்கை : 38