பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தலைமையில் ஹைதராபாத்தில் 2வது பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம்!

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:16PM by PIB Chennai

பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு பணிக்குழுவின் 2வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தியாவின் தலைமை பொறுப்பின் கீழ் நடைபெற்ற இந்த கூட்டத்தை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் அதன் செயலாளர் ரச்னா ஷா தொடங்கி வைத்துப்பேசினார்.

 

 ஊழலுக்கு எதிராக இந்தியாவின் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை வலியுறுத்தியதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஊழல் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளைக் விரைவாகக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கு ஏதுவாக, உறுப்பு நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு வலையமைப்பு ஒன்றை அமைக்க இக்கூட்டத்தில், கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பி ஓடிய குற்றவாளிகளின் சொத்துக்களை விரைவாக முடக்கி மீட்பதற்கான தகவல் பரிமாற்ற நடைமுறைகள் மற்றும் அதிகாரிகளின் தொடர்புகளுக்கான பட்டியலை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

இதனுடன், டிஜிட்டல் கொள்முதல் முறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு  போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஊழலை முன்கூட்டியே தடுப்பது குறித்தும், கிரிப்டோ போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் நடக்கும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகளைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் விரிவாக ஆலோசித்தன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294859&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2294859

 

***

 

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2295622) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati