பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சகங்கள், துறைகளில் பெறப்படும் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுகிறது

प्रविष्टि तिथि: 06 AUG 2026 2:16PM by PIB Chennai

மத்திய, மாநில அரசுகளின் அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் ஆகியவற்றில் வலுவான குறைதீர்ப்பு வழிமுறைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் பெறப்படும் புகார்களுக்கு 21 நாட்களுக்குள் தீர்வுக் காணப்பட வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் குறைகளுக்குத் தீர்வு காண்பதை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வுகள் வாயிலாகத் தொடர்ந்துக் கண்காணிக்கப்படுகிறது. சிக்கல் நிறைந்த பிரச்சனைகள் துறைகளுக்கு இடையேயான ஆலோசனைகள் சட்ட நடைமுறைகள் அல்லது விரிவான சரிப்பார்ப்புத் தேவை ஆகிய காரணங்களால் சில குறைகளுக்குத் தீர்வு காண்பது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைவிட கூடுதல் காலக்கெடு தேவைப்படலாம் எனினும், தாமத்தைக் குறைக்கவும் குடிமக்கள் தேவையற்ற சிரமங்களுக்கு உள்ளாகுவதைத் தவிர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகக் குறைகளுக்கு குறித்த நேரத்தில் தீர்வு காண்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகளில் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கான காலக்கெடு சராசரியாக 2021-ல் 32 நாட்களாக இருந்த நிலையில் 2026-ல் (15-07-2026 வரை) 13 நாட்களாகக குறைந்துள்ளது. இதன் மூலம் பெரும்பாலான குறைகளுக்கு 21 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படுவது தெரியவருகிறது.

இத்கவலை மத்தியப் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295410&reg=3&lang=1

***

VJ/IR/SM/SH

 


(रिलीज़ आईडी: 2295520) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी