பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் கிராம மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள்: மத்திய அரசு தகவல்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 12:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் 2024 அக்டோபர் 2 அன்று தொடங்கிவைக்கப்பட்ட தர்த்தி ஆபா பழங்குடியினர் கிராம மேம்பாட்டு இயக்கம் குறித்த தகவல்களை மத்திய பழங்குடியினர் நலத்துறை இணைமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் நேற்று (05.08.2026) தெரிவித்தார். 17 அமைச்சகங்களின் 25 செயல்பாடுகளைக் கொண்ட இத்திட்டம், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 549 மாவட்டங்களில் உள்ள 63,843 கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயனடையும் வகையில் சுகாதாரம், கல்வி, அங்கன்வாடி வசதிகள், வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக, 500 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையுடன் குறைந்தபட்சம் 50 சதவீதம் பழங்குடியினர் வாழும் தகுதியுள்ள கிராமங்களின் பட்டியலை வழங்குமாறு மாநில அரசிகளிடம் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நன்மைகள் பயனாளிகளுக்கு விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்யத் துறை சார்ந்த அமைச்சகங்களுடனும், மாவட்ட அதிகாரிகளுடனும் இடைக்கால மறுஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த இயக்கத்தின் கீழ் பல்வேறு அமைச்சகங்களும் மேற்கொண்டுள்ள சிறப்பான திட்டங்கள், முன்முயற்சிகளின் பட்டியலையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295349&reg=3&lang=1

 

***

VJ/PD/SH

 


(रिलीज़ आईडी: 2295491) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी