பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தால் பாதிக்கப்படும் பழங்குடியினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:29PM by PIB Chennai
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மீள் குடியேற்றப் பணிகள் ஆகியவை மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை மறுசீரமைப்புத் துறையின் கீழ் உள்ள கென்-பெட்வா இணைப்புத் திட்ட ஆணையம் தெரிவித்துள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.
எனினும், கென்-பெட்வா இணைப்புத் திட்டதின் வழிகாட்டுதல், கண்காணிப்புக் குழுக்களின் பழங்குடியின நல அமைச்சகம் உறுப்பினராக உள்ளது என்று அவர் கூறினார். இக்குழுக்கள் திட்டத்தால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கான மறுவாழ்வு, மீள்குடியேற்றத் திட்டத்தின் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. மேலும் கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் திட்டத்தால் பாதிக்கப்பட்டப் பழங்குடியின குடும்பங்களுக்கான மறுவாழ்வு, மீள்குடியேற்றத் திட்டத்திற்கு பழங்குடியின நல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் 2016-ல் சமர்ப்பித்த முன்மொழிவின் படி, இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 1,913 குடும்பங்கள் (8,339 பேர்) இடம் பெயர வேண்டியுள்ளது. இதில் 648 குடும்பங்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295348®=3&lang=1
***
VJ/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2295456)
आगंतुक पटल : 9