பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் முகமைகள்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 12:35PM by PIB Chennai

பழங்குடியின மக்களிடையே வாழ்வாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள்தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 'வன வள மேம்பாட்டு மையங்களை அமைத்து, 'பிரதமரின் பழங்குடியின மேம்பாட்டு இயக்கம்', 'பிரதமரின் ஜன்மன்' ஆகிய திட்டங்களைப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதற்காக அத்துறைக்கான இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, வன வள மேம்பாட்டு மையங்களின் உறுப்பினர்களுக்கு மதிப்புக்கூட்டல், திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக மக்களவையில் கூறினார்.

தெலங்கானா மாநிலத்தில் வன வள மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்காக, மாநில அளவில் அதற்கான அமலாக்க முகமையாக தெலங்கானா மாநில கிரிஜன் கூட்டுறவுக் கழகம் செயல்படுகிறது. அம்மாநில அரசின் பழங்குடியினர் நலத்துறை (மாநில ஒருங்கிணைப்புத் துறை) இந்த முகமையை இதற்கென பிரத்யேகமாக நியமித்துள்ளது.

பழங்குடியின தொழில்முனைவோர் பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குச் சலுகையுடன் கூடிய கடனுதவிகளை வழங்குவதற்காக, தேசிய / மாநில பட்டியல் பழங்குடியினர் நிதி, மேம்பாட்டுக் கழகத்திற்கு மூலதன ஆதரவுத்  திட்டத்தின் கீழ், பழங்குடியினர் கூட்டுறவு நிதிக் கழகத்திற்கு மத்திய  அமைச்சகம் மூலதன உதவிகளை வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295353&reg=3&lang=1

***

VJ/SV/SH

 


(रिलीज़ आईडी: 2295452) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी