தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவில் அம்பாலா மாவட்டம் ஷாஜாத்ப்பூரில், மஞ்சள் காமாலை நோயால் சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக,தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 06 AUG 2026 1:34PM by PIB Chennai

ஹரியானாவில் அம்பாலா மாவட்டம் ஷாஜாத்ப்பூரில், மாசடைந்த குடிநீரைப் பெருகியதால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயால் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அப்பகுதியில் மேலும் பல குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுக் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊடகங்களில் வெளியான செய்திகளில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை மனித உரிமை மீறல் பிரச்சினையாக  ஆணையம் கருதுகிறது. அதன்படி, ஹரியானா மாநில தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து இரண்டு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. சிகிச்சையில் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அம்மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295387&reg=3&lang=1

(Release ID: 2295387)

 

***

 

VJ/SV/SH


(रिलीज़ आईडी: 2295446) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi