பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக 'போஷான் டிராக்கர்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2026 4:23PM by PIB Chennai

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வளமிகு அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0'  திட்டத்தின் கீழ் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை ஆன்லைனில் கண்காணிக்க போஷான் டிராக்கர் என்ற டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி, அங்கன்வாடி மையங்களின் தினசரி இயக்கம், குழந்தைகள் வருகைப்பதிவு, சமைத்த உணவு மற்றும் உலர் தானியங்கள் விநியோகம் ஆகிய தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன.

 

குழந்தைகளின் உயரம் மற்றும் எடையைத் துல்லியமாக அளவிட அனைத்து அங்கன்வாடிகளுக்கும் நான்கு வகையான வளர்ச்சி அளவீட்டுச் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைபேசிகள் மூலம் இத்தரவுகளைப் பதிவேற்றம் செய்கின்றனர். மேலும், தரவுகளின் துல்லியத்தை உறுதிசெய்ய உயர் அதிகாரிகளுக்கான சிறப்பு 'ஆதரவு மேற்பார்வை' வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,29,415 அங்கன்வாடிகள் 'வளமிகு அங்கன்வாடிகளாக'  தரம் உயர்த்தப்பட்டுள்ளன என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்திரி தாக்கூர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294872&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2294872

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295281) வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी