பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்களின் சொத்துரிமை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான மத்திய அரசின் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 4:21PM by PIB Chennai
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் தகவலின்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 42.3 சதவீதம் பேர் வீடுகளையும், 31.7 சதவீதம் பேர் நிலங்களையும் தனியாகவோ அல்லது கூட்டு உரிமையாளராகவோ கொண்டுள்ளனர்.
பெண்களின் சொத்து உரிமையையும் பொருளாதார ஆற்றலையும் உயர்த்தும் நோக்கில், 'பிரதமர் வீட்டுவசதி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வீடுகள் கட்டாயமாகப் பெண்களின் பெயரிலோ அல்லது தம்பதியரின் கூட்டுப் பெயரிலோ மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தீன்தயாள் விளிம்புநிலை மக்கள் மேம்பாட்டுத் திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் கடனுதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன், நில உரிமையாளர் விவரங்களில் பெண் உரிமையாளர்களின் பங்களிப்பைத் துல்லியமாகப் பதிவு செய்ய, நில உரிமைப் பதிவேடுகளில் 'பாலினம்' என்ற தனிப் பத்தியைச் சேர்க்க நில வளத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்திரி தாக்கூர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294868®=3&lang=1
செய்தி அடையாள எண் 2294868
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2295278)
आगंतुक पटल : 3