திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழில்துறைக்குத் தேவையான திறன்களை முன்கூட்டியே கற்பதற்கான நடைமுறைகளை அங்கீகரித்தல்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 4:14PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம், மக்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலான பயிற்சித் திட்டம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழிற்பயிற்சி கல்வி நிலையங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் விரிவான கட்டமைப்புகள் மூலம் இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தொழில்துறைக்குத் தேவையான திறன்களுடன் இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதன் மூலமும், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், மத்திய அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
தேசிய கல்விக் கொள்கை 2020, தொழிற்கல்வியை முக்கியக் கல்வியுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் கல்வி, தொழிற்கல்விப் பாதைகளுக்கு இடையே தடையற்ற பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.
மாநிலங்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294854®=3&lang=1
(Release ID: 2294854)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295259)
आगंतुक पटल : 8