உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சல் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 3:08PM by PIB Chennai

இந்தியாவில் நக்சல் தீவிரவாதத்தைக்  கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் 2015-ஆம் ஆண்டு "தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

 இதன் கீழ் 4,314 கி.மீ தொலைவிற்குச் சாலைகள், 1,511 செல்போன் கோபுரங்கள், 1,508 அஞ்சலக வங்கிச் சேவைகள், 45 ஏகலைவா மாதிரிப் பள்ளிகள், 9 தொழில்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜகத்பூரில் 240 படுக்கைகள் கொண்ட முன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த 663 பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்கள் கட்டப்பட்டு, பாதுகாப்புச் செலவினங்களுக்காக ரூ.3,805.04 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைக் கைவிட்டுச் சரணடைபவர்களுக்கு மறுவாழ்வுத் தொகையாக ரூ.5 லட்சம் வரை நிதியுதவியும், மாதம் ரூ.10,000 உதவித்தொகையுடன் தொழில்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

 

தற்போது அங்குள்ள பாதுகாப்பு முகாம்கள் மக்கள் வசதி மையங்களாக மாற்றப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294794&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2294794

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2295256) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी