பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய பொதுக் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பு, டிஜிட்டல் ஓய்வூதியச் சீர்திருத்த நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 2:43PM by PIB Chennai
பொதுமக்கள் குறைதீர்ப்பு நடவடிக்கைகளின் செயல்திறன், தரம், பொறுப்புடைமையை மேம்படுத்தும் நோக்கில், மத்திய பொதுக் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் 10-படிநிலை சீர்திருத்த அம்சங்கள், அமலாக்கம், குறைதீர்ப்பு காலக்கெடுவை 30 நாட்களிலிருந்து 21 நாட்களாகக் குறைப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் (ஆகஸ்ட் 2024-ல்) வெளியீடு, மூத்த அதிகாரிகளால் குறைதீர்ப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது ஆய்வு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத் தொகுதி, செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் ஆகியவை அடங்கும். 2026-ம் ஆண்டில் (ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை), இந்த குறைதீர்ப்பு அமைப்பின் வாயிலாக, பொது மக்களிடமிருந்து 15,20,576 மனுக்கள் பெறப்பட்டன. மத்திய அமைச்சகங்கள்/துறைகளைப் பொறுத்தவரை, குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சராசரி கால அளவு 13 நாட்களாக இருந்தது.
பவிஷ்யா என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த இணையவழி ஓய்வூதிய அனுமதி, கட்டணக் கண்காணிப்பு அமைப்பாகும். இது ஓய்வூதிய விண்ணப்பம் முதல் மின்னணு ஓய்வூதியக் கட்டண ஆணை வெளியீடு வரை, முழு அளவிலான செயல்முறையையும் இணையவழியில் மேற்கொள்ள உதவுகிறது.
மேலும், ஒரே ஒரு மின்னணு கையொப்பம் மூலம், ஓய்வூதிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கவும் சரிபார்க்கவும் வழிவகுக்கிறது. டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முறை, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் பதிவுகளைத் தானியங்கி முறையில் புதுப்பித்தல் ஆகியவற்றின் மூலம் ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இது ஓய்வூதியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், ஓய்வூதியதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புதல்களையும் வழங்குகிறது.
மக்களவையில் இன்று மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294778®=3&lang=1
(Release ID: 2294778)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295217)
आगंतुक पटल : 3