நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரித் துறையில் சீர்திருத்தங்கள்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 1:58PM by PIB Chennai
நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் சுரங்கப் பணிகளை மேலும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும், அறிவியல் பூர்வமாகவும் மாற்றும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு தொடர்ச்சியான கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கம் திறக்கப்பட்டதுடன், ஏலம் மூலம் நிலக்கரி ஒதுக்கீடு செய்யும் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. வர்த்தக நிலக்கரிச் சுரங்கத்தில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. PARIVESH 2.0 இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதி முறை, சுலபமாக தொழில் செய்வதை ஊக்குவிக்கிறது. கோக்கிங் நிலக்கரி முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கங்களில் நவீன தொழில்நுட்பங்கள், 'காயிலா சக்தி' டாஷ்போர்டு மற்றும் 'கனன் பிரஹாரி' செயலி ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2030-ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்கும் இலக்கை எட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 1 பில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294736®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2295170)
आगंतुक पटल : 8