பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மிஷன் கர்மயோகி & அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சியின் டிஜிட்டல் திறன் மேம்பாடு
प्रविष्टि तिथि:
05 AUG 2026 2:40PM by PIB Chennai
இந்தியாவின் குடிமைப் பணித் திறன் மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான மிஷன் கர்மயோகி, செப்டம்பர் 2020-ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மனிதவள மேலாண்மை அமைப்புகளை விதிமுறைகளைச் சார்ந்த நிலையிலிருந்து, பணி சார்ந்த பொறுப்புகளுடன் கூடிய நிலைக்கு மாற்றுவதும், இந்திய விழுமியங்களில் வேரூன்றியுள்ள அதே சமயம் உலகளவிலான பரந்த கண்ணோட்டத்தைக் கொண்ட குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
மிஷன் கர்மயோகி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சிக்கான தளம், தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மிஷன் கர்மயோகி திட்டத்தைச் சீராகச் செயல்படுத்தும் நோக்கில், கர்மயோகி பாரத், திறன் மேம்பாட்டு ஆணையம் ஆகியவை 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, இத்தளத்தில் 1.70 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் துறைசார்ந்த, செயல்பாட்டு, நடத்தை சார்ந்த திறன்களை வளர்க்கும் 5,600-க்கும் மேற்பட்ட பாடநெறிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம், இந்தி உட்பட 23 இந்திய மொழிகளில் பாடநெறிகள் கிடைப்பதால், இவை பிராந்திய, மொழிசார் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன. இந்த ஆன்லைன் பயிற்சித் தளத்தில் உள்ள பாடநெறிகளில், 1,433 பாடநெறிகள் இந்தி, பிற இந்திய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த இணையதளம் இதுவரை 14.29 லட்சத்திற்கும் அதிகமான பாடநெறி நிறைவுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
மக்களவையில் இன்று மத்திய பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294777®=3&lang=1
(Release ID: 2294777)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295154)
आगंतुक पटल : 5