விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2026 2:28PM by PIB Chennai

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப்பணியின் முன்னேற்றம் சார்ந்த நடவடிக்கைகள், மனித மதிப்பீடு போன்ற பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக மனிதர்களை அனுப்பும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டப் பணிகளின் சோதனைகள் நிறைவடைந்துள்ளது.

குழு தொகுதி, சேவை தொகுதிக்கான உந்துவிசை அமைப்புகள் உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, உயிர் வாழ் ஆதரவு அமைப்பு போன்றவற்றிற்கான பொறியியல் மாதிரிகள் ஆகியவை உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

5 வகையான மோட்டார்கள் உருவாக்கப்பட்டு நிலையான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுப்பாதை தொகுதி தயாரிப்பு வசதி, ககன்யான் கட்டுப்பாட்டு மையம், ககன்யான் கட்டுப்பாட்டு வசதி, குழு பயிற்சி வசதி, போன்றவைகளுடன், இரண்டாவது ஏவுதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டிவி-டி2 பணியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமான செயல்பாடுகள், தகவல் தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட அமைப்புக்களின் நிறுவல்களுக்காக  மற்ற விண்வெளி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்த பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில், ககன்யான் திட்டப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

மக்களவையில் இன்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294770&reg=3&lang=1

(Release ID: 2294770)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295142) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR