மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை மேம்பாடு, பால் உற்பத்தித் திறன் மற்றும் கால்நடை சுகாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
05 AUG 2026 1:59PM by PIB Chennai
நாடு முழுவதும் கால்நடை மேம்பாட்டை வலுப்படுத்தவும், பால் உற்பத்தித் திறனை உயர்த்தவும், கால்நடை சுகாதாரத்தைப் பேணவும் மத்திய அரசு பல இலக்கு அடிப்படையிலான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
தேசிய கால்நடை திட்டம், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம் மற்றும் கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டம் ஆகிய முதன்மைத் திட்டங்களின் கீழ் உள்கட்டமைப்பு உருவாக்கம், தீவன மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் ஊக்குவிப்புக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தில் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சராசரி கால்நடை பால் உற்பத்தித் திறன் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், தீவனப் பற்றாக்குறையைப் போக்க தரமான தீவன விதை உற்பத்தி மற்றும் தீவன உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கோமாரி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோய்களுக்கு எதிரான தடுப்பூசி திட்டங்களுக்கு மத்திய அரசு 100 சதவீத நிதியுதவி வழங்கி வருவதுடன், பாரத் பசுதன் அமைப்பின் கீழ் 1962 உழவர் செயலி மூலமாக டிஜிட்டல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294737®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2295118)
आगंतुक पटल : 8