PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவில், மின்சார வாகனப் பயன்பாட்டின் எழுச்சி, பொருளாதார வளர்ச்சி, எரிசக்திப் பாதுகாப்பு, தூய்மைக்கான உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 05 AUG 2026 12:02PM by PIB Chennai

மின்சார வாகனங்களின் பயன்பாட்டில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. மின்சார வாகனங்களின் போக்குவரத்து தற்போது பொருளாதார வளர்ச்சி, எரிசக்திப் பாதுகாப்பு, தூய்மையான எதிர்காலம் ஆகியவற்றின் முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2016 முதல் மின்சார வாகனங்களின் விற்பனை 46 மடங்கு அதிகரித்துள்ளது; இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தில் ஏற்பட்டுள்ள வலுவான மாற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. கடந்த 2020-ல் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஏற்றுமதி, 2024-ல், 84 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவை வளர்ந்து வரும் மின்சார வாகனங்களுக்கான மையமாக இந்தியாவை நிலைநிறுத்த உதவுகிறது.

உற்பத்திக்கான தேசியத் திட்டம், வாகனங்கள், அவற்றின் உதிரி பாகங்களின் உற்பத்தி சார்ந்தத் தொழில்துறைக்கான, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், புதுமையான வாகன மேம்பாட்டிற்கான பிரதமரின் இ-டிரைவ் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள், அதிக தன்னிறைவு கொண்ட மின்சாரப் போக்குவரத்துக்கானச் சூழலமைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களில், அன்றாடப் பயணங்கள், சிறிய நகரங்களில், தொலைதூரப் பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பு ஆகியவை, நாடு முழுவதும் அடிப்படை அளவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மாற்றத்தின் மையமாக மின்சாரப் போக்குவரத்து உள்ளது. இந்தத் தொழில்நுட்ப மாற்றம் நாட்டின் பருவநிலை, நிலையான போக்குவரத்து ஆகியவற்றிற்கான தொலைநோக்குப் பார்வையில், முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் ஊக்கத்தொகைத் திட்டம், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, விரைவான தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு, மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளன.

இந்தியாவின் போக்குவரத்து மாற்றம், சுற்றுச்சூழல் சார்ந்த இன்றியமையாத வசதிகள் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் உள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய, வலுவான  தொழில்துறை சார்ந்த செயல்பாடுகளை மறுவடிவமைத்து வருகிறது. இந்த மாற்றம் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய உத்திசார் நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.

மேலும், இது புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கும், பொருளாதாரத்திற்குத் திறமையான, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட வளர்ச்சிப் பாதையையும் உருவாக்குகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தேசிய மின்சாரப் போக்குவரத்து இயக்கத் திட்டம், கலப்பின, மின்சார வாகனங்களை விரைவாக அறிமுகம் செய்து உற்பத்தி செய்வதற்கானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெளிவான உத்திசார் முன்னுரிமை அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெட்ரோலிய எரிபொருட்களுக்கான இறக்குமதிச் செலவைக் குறைத்தல், மோசமடைந்து வரும் நகர்ப்புறக் காற்று மாசுபாட்டைச் சமாளித்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவின் மொத்த கார்பன் உமிழ்வில், 9%-ம் போக்குவரத்து வாகனங்களால் வெளியேற்றப்படும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294688&reg=3&lang=1

 

***

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2295013) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Bengali-TR , Bengali-TR , Gujarati